ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற தீர்மானம் மிக்க விசேட அமைச்சரவை கூட்டம் – நாடாளுமன்ற பெரும்பான்மை பலம் குறித்து விரிவாக ஆராய்வு!

Saturday, May 7th, 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று மாலை விசேட அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.

இதில், பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி, பொது நிர்வாக முடக்கல் போராட்டம் உட்பட நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் குறித்து, அமைச்சர்கள் இதன்போது கருத்துக்களை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் நாடாளுமன்ற பெரும்பான்மை பலம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் 113 என்ற பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் நபருக்கு பிரதமர் பதவியை வழங்க வேண்டி ஏற்படும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, தமது பதவியிலிருந்து விலகுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே

பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தம்மிடம் கோரவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்..

அத்துடன் பிரதமர் இராஜினாமா செய்யும் எவ்வித எதிர்பார்ப்போ, ஆயத்தமோ இல்லையென அவர் கூறியுள்ளார்.

அத்துடன் பிரதமரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதியினால் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் பிரதமர் இராஜினாமா செய்யவுள்ளதாகவும் வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: