ஏப்ரல் 21 கொடூரத் தாக்குதல் – மார்ச் மாதம் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

Friday, January 15th, 2021

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதற்கு உயர்நீதிமன்றின் எழுவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனு இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனெக அளுவிகார, சிசிர த ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, எல்.டீ.பீ தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ மற்றும் பிரீத்தி பத்மன் சூரசேன ஆகிய 7 பேர் கொண்ட நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே மனு தொடர்பான விசாரணைளை மார்ச் மாதம் 8, 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் முன்னெடுக்கவுள்ளதாக நீதிபதிகள் குழு தெரிவித்திருந்தது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் போதியளவு சாட்சிகள் கிடைக்கப்பெற்ற போதிலும் அதனை தடுத்து நிறுத்தாதன் ஊடாக அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கான திகதியையே உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியவர்களுக்கு எதிராக குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

பட்டதாரி பயிலுனர்கள் வேண்டாம்: சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள் - தேர்...
கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 10 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா - கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்...
தாய்லாந்து செல்கிறார் முன்னாள் அரச தலைவர் கோட்டாபய . தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என தாய்லாந்து அரசாங்...