ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சிக் கூட்டம் நாளை – இடைக்கால பாதீட்டு சட்டமூலம் மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிப்பு!

Monday, August 29th, 2022

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆளும் கட்சிக் கூட்டம் நாளை நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதியினால் அன்றையதினம் நாடாளுமன்றில் திருத்தப்பட்ட இடைக்கால பாதீட்டு சட்டமூலம் முன்வைக்கப்பட்டதன் பின்னர் இந்த சந்திப்பினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட இடைக்கால பாதீட்டு சட்டமூலம் மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இதேநேரம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்கள் கொழும்பிற்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.

நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் காரியாலயத்தில் இன்ற முற்பகல் 10 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்றிரவு 7 மணிக்கு எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் திருத்தப்பட்ட இடைக்கால பாதீடு தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: