ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி ஏற்று இன்றுடன் ஒருவருடம் நிறைவு – நாட்டு மக்களுக்கு விஷேட உரை!
Wednesday, November 18th, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் 8 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி ஏற்று இன்று ஒருவருடம் பூர்த்தியாகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிட்ட அவருக்கு 52.25 சதவீத வாக்குகள் கிடைக்கப்பெற்றன.
நாட்டின் ஜனாதிபதியாக முதன்முறையாக தெரிவான அரசியல் செயற்பாட்டுடன் நேரடியாக தொடர்பு படாதவரும், முன்னாள் இராணுவ அதிகாரியாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளார்.
2019 நவம்பர் மாதம் 18ஆம் திகதி அவர் அனுராதபுரம் ருவன்வெலி மஹா விகாரைக்கு முன்னால் அவர் தமது பதவியை ஏற்றுக் கொண்டார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றையதினம் நாட்டு மக்களுக்காக விசேட உரையை ஆற்றவுள்ளார். இதன்படி இன்று இரவு 8.30க்கு இந்த உரை இடம்பெறவுள்ளது. நாட்டின் அனைத்து தொலைக்காட்சி, வானொலி சேவை களிலும் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களிலும் இந்த உரையானது நேரடியாக ஒளிபரப்பட்டும் என அவரது ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


