இரணைமடுக் குளத்தின் கீழ் 17,610 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோகம் – மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடவடிக்கை!

Saturday, March 27th, 2021

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீர்ப்பாசனத்தின் கீழ் 17 ஆயிரத்து 610 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான கூட்டம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, இரணைமடுக் குளத்தின் நீர்ப்பாசனம் ஊடாக 17ஆயிரத்து 610 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டதுடன் இறுதி விதைப்புத் திகதி, கால்நடைக் கட்டுப்பாடு விவசாயக் காப்புறுதி போன்ற விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.

அத்துடன், இரணைமடுக் குளத்தின் ஊடான சிறுபோக நெற்செய்கை தவிர, கழிவு வாய்க்கல் மற்றும் ஆறுகளைப் பயன்படுத்தி வேறு எந்தப் பயிர்ச் செய்கையையும் அனுமதிக்க முடியாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறுபோகச் செய்கை ஆரம்பிக்கப்படும்போது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகளும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: