ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் முக்கிய அமைச்சுக்கள்!

ஊடகத்துறை அமைச்சு மற்றும் அதன் கீழ் காணப்படும் நிறுவனங்கள் உள்ளிட்ட விடயதான விவகாரங்கள் அனைத்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக, அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் கீழ், ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக் கூடிய அமைச்சுகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக் கூடிய நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
இலங்கைக்கான கடற்பகுதி மேலும் விரிவுபடுத்த ஐ.நா.இணக்கம்!
மாணவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை!
வாடகை அடிப்படையிலான கட்டடங்களை அமைச்சுகளின் பாவனைகளுக்கு பெற்றுக்கொள்ள - ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித...
|
|