ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்கள் பத்திரத்தை கையளித்த பிரித்தானிய மற்றும் வடக்கு அயர்லாந்தின் உயர்ஸ்தானிகர்கள்!

இலங்கைக்கான பிரித்தானிய மற்றும் வடக்கு அயர்லாந்தின் புதிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பேட்ரிக் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்கள் பத்திரத்தை கையளித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பேட்ரிக் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்கள் பத்திரத்தை சமர்ப்பித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பில் உள்ள இத்தாலியின் தூதுவர் டொமியானோ பிராங்கோவியும் தனது நற்சான்றிதழ்கள் பத்திரத்தை கையளித்துள்ளார்.
மேலும் கொழும்பில் உள்ள ஜேர்மனியின் தூதுவர் பீலிக் நியூமானும் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து நற்சான்றிதழை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை- சீனாவுக்கு இடையில் கடல்சார் ஒத்துழைப்பு!
ஏப்ரல் 21 தாக்குதல்: 18 முழுமையற்ற விசாரணை அறிக்கைகளை திருப்பியனுப்பினார் சட்டமா அதிபர்!
இந்தியா மற்றும் இந்தோநேசியாவின் நன்கொடை - எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடையும் - சுகாதார அமைச்ச...
|
|