ஜனாதிபதித் தேர்தல் – அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

Friday, August 9th, 2024

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

கடந்த 5ஆம் திகதியுடன் அஞ்சல்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் நிறைவடையவிருந்த நிலையில், அது இன்று நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், உரிய காலப்பகுதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேநேரம், எந்தவொரு காரணத்திற்காகவும் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பக் காலம் மீண்டும் நீடிக்கப்படமாட்டாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

000

Related posts: