ஜனாதிபதித் தேர்தலுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு – , தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலுக்கு பாதீட்டில் பணம் ஒதுக்கப்பட்டதால், ஜனாதிபதித் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் கூடிய போதே இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன் அரசாங்கத்தை நடத்துவதற்கு ஆதரவளித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க தாம் தயாராகி வருவதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்ற போதிலும், ஜனாதிபதித் தேர்தலை கண்டிப்பாக நடத்துவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலம் மிகவும் கடினமான காலகட்டமாக இருந்ததாகத் தெரிவித்த ஜனாதிபதி, அதனை நாடு தற்போது கடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|