ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு!

Monday, September 2nd, 2024

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று (02) அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளன.

அஞ்சல் திணைக்களத்தினால் உரிய வகையில் குறித்த வாக்காளர் அட்டைகள், வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 14ஆம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சுமார் 8,000 பேரைக் கடமைகளில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாக சிரேஷ்ட பிரதி அஞ்சல்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் 4ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் அஞ்சல் வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளன.

குறித்த தினங்களில் வாக்களிக்கத் தவறுபவர்கள் எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

000

Related posts: