கணனி மயமாகிறது காணிப் பதிவுகள் – பதிவாளர் நாயகம் நீல்.டி.அல்விஸ்!

Monday, July 30th, 2018

நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்ட காணிப் பதிவகங்களை பதிவாளர் நாயகத்தின் கணினி வலையமைப்புடன் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் நீல்.டி.அல்விஸ் தெரிவித்துள்ளார்.

மாவட்ட காணிப்பதிவகங்கள் பதிவாளர் நாயகத்தின் கணினி வலையமைப்பினுள் கொண்டுவரப்படுவதால் மக்கள் தமது தொழில் , திருமணம், பிறப்பு, இறப்பு போன்ற பதிவுச் சான்றிதழ்களை கால விரயமின்றிப் பெற்றுக்கொள்ள முடியும்.

தமது மாவட்ட பிரதேச மாவட்ட செயலகங்களில் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களை தவிர்ந்த வேறு மாவட்ட பிரதேச மாவட்ட செயலகங்களில் பதிவு செய்யப்பட்ட திருமணம், பிறப்பு, இறப்பு பதிவுச் சான்றிதழ்களை இக்கணினி வலையமைப்பினூடாக சில நிமிட நேரங்களில் பெற்றுக்கொள்ள முடியும். மாளிகாவத்தையிலுள்ள மத்திய பதிவேட்டறைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லையென அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் முதலாவதாக கல்முனை மாவட்ட காணி பதிவகம் மேற்படி வலையமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்பாறை மாவட்டம் தவிர்ந்த மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட பிரதேச செயலகம் மாவட்ட செயலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை இங்கு பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: