ஜனாதிபதித் தேர்தலுக்காக 8,000 உள்ளூர் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த திட்டம் -PAFRAL அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவிப்பு!
Saturday, June 22nd, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 8,000 உள்ளூர் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக PAFRAL அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்
அத்துடன் ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பைச் சேர்ந்த கணக்கெடுப்பு குழுக்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முன் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் PAFRAL அமைப்பினால் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள விஞ்ஞாபனத்திற்கு சில அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
00
Related posts:
பொலித்தீன் தொடர்பில் சுற்றிவளைப்புக்கள்!
செப்டெம்பர் 20 முதல் சர்வதேச புத்தக கண்காட்சி!
2024 ஆம் ஆண்டில் 312,836 பேர் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு பயணம்!
|
|
|


