ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு!
Wednesday, November 9th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் Kristalina Georgieva இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
எகிப்தில் இடம்பெறும் COP 27 மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது கடன் முகாமைத்துவம் தொடர்பாக வெற்றிகரமான கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டதாக ருவான் விஜேவர்தன தமது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் கானா நாட்டின் நிதி அமைச்சர் மற்றும் மாலைதீவின் சபாநாயகர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
வடக்கின் விவசாயத்துறை மேம்பாடடைய விவசாயிகளுக்கு அனைத்தவகையான மானியங்களும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டு...
கூட்டுறவுத்துறை பிரச்சனைகளுக்கு மூன்று மாத காலத்திற்குள் தீர்வு!
வீதியில் குப்பைகளை கொட்டிய நபர்கள் - சீ.சி.ரீ.வி கமராவில் சிக்கியதால் மீண்டும் அள்ளிச் செல்லவேண்டிய ...
|
|
|


