ஜனவரி முழுவதும் இரவு வேளைகளில் வெப்ப நிலையில் அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Sunday, January 2nd, 2022

நாட்டில் மன்னார், அம்பாறை, கொழும்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் ஜனவரி மாதத்தின் இரவு வேளைகளில் வழமையாக நிலவும் வெப்பத்தை விடவும் அதிக வெப்பம் பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் சில மாவட்டங்களில் வழமையான வெப்பநிலை மேலும் வீழ்ச்சியடையக்கூடும். குறிப்பாக புத்தளம், மன்னார், அநுராதபுரம், கொழும்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பகல் வேளையில் நிலவும் வழமையான வெப்பநிலையின் அளவு வீழ்ச்சியடைவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குருணாகல், கண்டி, காலி மற்றும் இரத்தினப்புரி ஆகிய மாவட்டங்களும் அதில் உள்ளடங்குகின்றன. அத்துடன் இந்த மாதம் கேகாலை மற்றும் இரத்தினப்புரி மாவட்டங்களில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

அத்தியாவசிய உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கான அவசரகால விதிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனாதிப...
இலங்கையர்களில் 49 இலட்சம் பேருக்கு உணவு உதவி தேவைப்படுகிறது - ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதி...
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை - நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம...