ஜனவரி இறுதிக்குள் கொரோனாவிற்கான தடுப்பூசி இலங்கையில் – தொற்று நோயியல் ஆய்வு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவிப்பு!

Tuesday, January 12th, 2021

ஜனவரி மாதத்தின் இறுதிக்குள் நாட்டிற்கு கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தொற்று நோயியல் ஆய்வு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற கொவிட் தடுப்பூசிக்கு 200 இந்திய ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த தடுப்பூசி, இந்தியாவின் பூனேயில் உள்ள சீரம் நிறுவகத்தினால் கொவி சீல்ட் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இந்த மாதம் 16ஆம் திகதிமுதல் பொதுமக்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் முதற்கட்டமாக 2 இலட்சம் அளவான கொவி சீல்ட் தடுப்பூசிகள் நாளைமுதல் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் விலை நிர்ணயம் உறுதிசெய்யப்பட்டதன் பின்னரே இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: