இலங்கையுடனான எமது உறவுகளை கெடுப்பதற்கு எவரையும் அனுமதியோம் – சீனத் தூதுவர் !

Thursday, September 1st, 2016

கொழும்பு நிதி நகரத் திட்டத்தைப் பயன்படுத்தி சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை கெடுப்பதற்கு எவரையும் சீனா அனுமதிக்காது என்று, இலங்கைக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார்.

சீன நிறுவனங்களால் கட்டப்படவுள்ள நிதி நகரத்தை, உலகின் எந்தப் பகுதியில் உள்ள நிறுவனங்களும் தமது வெளிப்படையான வர்த்தக நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஏற்கனவே சில இந்திய நிறுவனங்களும் தொடர்புபட்டுள்ளன. இந்தியாவின் பங்களிப்பு அவசியமானது. எந்த மூன்றாவது தரப்பினதும் பங்களிப்பை நாம் வரவேற்கிறோம்.

மூலோபாய, அரசியல் மற்றும் கலாசார உறவுகளை விட, வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை அனைத்துலக அளவில் கட்டியெழுப்புவது சிறிலங்காவுக்கு மிகவும் முக்கியமானது. இருதரப்பு உறவுகள் மற்றும் உறுதிப்பாடுக்கு பொருளாதார உறவுகள் மாத்திரமே, உறுதியான அடித்தளமாக இருக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: