நிதி அமைச்சு அனுமதி – நவம்பர் முதலாம் திகதிமுதல் தனியார் வகுப்புகளை ஆரம்பிக்க நடவடிக்கை!

Saturday, October 23rd, 2021

எதிர்வரும் நவம்பர் 1 ஆம் திகதிமுதல் தனியார் கல்விநிலையங்களில் வகுப்புகளை நடத்துவதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளதாக அகில இலங்கை நிபுணத்துவ விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைய 100 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களுடன் தனியார் வகுப்புகளை ஆரம்பிக்கவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் கமல் பிரியங்கர தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்த போதிலும் தனது தொழிற்சங்கம் மற்றும் ரியூசன் வகுப்பு ஆசிரியர்கள் ஒன்லைன் மூலம் தொடர்ந்து கற்பித்து வருவதாகவும் மாணவர்களுக்கு இது ஒரு பிரச்சினை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சாதாரண தர, உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைககுத் தோற்றும் பதிய மாணவர்களுக்கு கூடுதல் நேரம் கற்பிக்கப்படவுள்ளது.

தற்போது நாடளாவிய ரீதியில் சுமார் 1  இலட்சம் ரியூசன் வகுப்பு ஆசிரியர்கள் இருப்பதாக அச்சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பழைய முறையின்படி மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்தமுடியும் - தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு!
இலங்கையின் சுற்றுலா மறுமலர்ச்சி பயணத்தில் இந்தியா முன்னணிப் பங்காளியாக உள்ளது - கொழும்பிலுள்ள இந்திய...
புதிதாக நியமனம் பெற்றிருக்கும் இலங்கைக்கான தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகரின் நற்சான்றுப் பத்திரங்கள் ஜ...