ஜனநாயக விரோத அரசியலையும், வன்முறையையும் எதிர்ப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
Saturday, August 6th, 2022
ஜனநாயக விரோத அரசியலையும், வன்முறையையும் தான் எதிர்ப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கும், காலிமுகத்திடல் போராட்டக் குழுவினரின் ஒரு பிரிவினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அதிபர் குறித்த விடயத்தை தெரிவித்ததாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, நாடு இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும். நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வெற்றி பெறுவதற்கு போராட்டக்களத்தில் உள்ள அனைத்து இளைஞர், யுவதிகளையும் சகல வழிகளிலும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
பேச்சுவார்த்தை மூலம் கோரிக்கைகளை பெற்றுக் கொள்வதைப் போன்று, நாட்டுக்காக செய்ய வேண்டிய பணிகளை நிறைவேற்ற வேண்டும்.என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
பளையில் விடுதிக்கு சீல் வைப்பு!
விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை!
கிளிநொச்சி ரயில் விபத்து: சமிக்ஞை கட்டமைப்பு தொடர்பில் விசேட விசாரணை!
|
|
|


