ஜனநாயகத்தை நேசிப்பவர் ரணில் – பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு!
Monday, June 19th, 2023ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையிலான அரசியல் உறவில், எந்தவித விரிசலும் ஏற்படவில்லை என்றும் இணைந்தே பயணிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே சாகர காரியவசம் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதாக இருந்தால், அதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்க வேண்டியது கட்சியின் பொறுப்பாகும்.
எனவே, அது தொடர்பாக கட்சிக்கு அறிவிக்குமாறு நாம் ஜனாதிபதியிடம் கோரினோம். ஜனநாயகத்தை நேசிக்கும் தலைவர் என்ற வகையில் அந்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றார். எமக்குள் எந்த பிளவும் இல்லை தொடர்ந்து பயணிப்போம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!
தொற்றாநோயை கட்டுப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் ராஜித !
கூட்டுறவு சங்கங்கள் கொள்வனவு செய்த நெல்லை அரிசியாக்கி சதோசவுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் - வர்த்த...
|
|
|


