சோள பயிர்ச் செய்கைக்கு இலவச உரம் – நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!.
Sunday, November 12th, 2023
40 ஆயிரம் ஏக்கர் அளவிலான சோள பயிர்ச் செய்கைக்குரிய உரங்களை இலவசமாக வழங்கவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
யூரியாவுக்கு மேலதிகமாக டி எஸ் பி மற்றும் எம் ஓ பி ஆகிய உரங்களும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
அத்துடன், சோளப் பயிர்ச்செய்கைக்கு தேவையான நிலத்தை பண்படுத்தும் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் சிறிய அளவிலான விவசாய தொழில்முனைவோர் திட்டத்தின் ஊடாக இந்த போகத்தில் ஐந்து மாவட்டங்களில் 40 ஆயிரம் ஏக்கர் சோளம் பயிரிடப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அமரர் அன்ரன் பற்றிக் றொக்ஷனின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தண்ணீர் வழங்கலைத் துரிதமாக்க புதிய கருத்திட்டங்கள் முன்வைப்பு !
வகுப்பறையில் ஒரு மாணவனிடம் இருந்து மற்றுமொரு மாணவனுக்கு கொரோனா பரவும் அபாயம் மிகவும் குறைவு - லேடி ...
|
|
|


