சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மாணவர்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை -அதிபர்களுக்கு கல்வி அமைச்சு உத்தரவு!
 Tuesday, June 13th, 2023
        
                    Tuesday, June 13th, 2023
            
கல்விப் பொது சாதாரணதர பரீட்சை முடிவடைந்த பின்னர் பாடசாலைகளின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மாணவர்களுக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.
மாணவர்கள் கல்வி கற்க பாடசாலைகளுக்கு வருவதாகவும், அவர்கள் கல்வி கற்கும் பாடசாலையின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், அந்த மாணவர்கள் எவ்வாறு பாடசாலைகளில் கற்றார்கள் என்பது தொடர்பில் ஆய்வு நடத்தப்பட வேண்டுமென கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்தார்
கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர் சில பாடசாலைகளின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, பாடசாலை அதிபர்கள் மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        