சைட்டம் மருத்துவ கல்லூரி பொறுப்பேற்கப்பட மாட்டாது!
Saturday, July 15th, 2017
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி ஒருபோதும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அனைத்து கல்லூரிகளையும் அரசாங்கம் பொறுப்பேற்றால் முதலீடு செய்ய ஒருவரும் முன்வர மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஏவ்வாறாயினும், நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனையை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்றும் இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறும் என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வீடுகள் கட்டுவதற்கு மணல் இன்றி மக்கள் அவதி !
பருவமழை உரியகாலத்திற்கு முன் ஆரம்பிக்கலாம- வளிமண்டலவியல் திணைக்களம்!
அரசாங்கத்திடம் பணமில்லாவிடின் வீட்டிலிருந்து வேலைசெய்யும் அரச ஊழியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முட...
|
|
|


