சைகை மொழியில் ஒளிபரப்ப கிடைத்தது அனுமதி – பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவிப்பு!

நாட்டில் வாழும் கேட்டல் குறைபாடு உள்ள சமூகத்தினருக்கு நாடாளுமன்ற அமர்வுகள் சைகை மொழியில் ஒளிபரப்பப்பட வேண்டும் என நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் முன்வைத்த பரிந்துரைக்கு சாதகமான பதிலை வழங்கியமைக்காக நன்றியைத் தெரிவிப்பதாக ஒன்றியத்தின் தலைவி வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே குறிப்பிட்டார்.
இதற்கமைய 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட விவாதத்தை சைகை மொழியிலும் ஒளிபரப்புவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன முன்வைத்த யோசனைக்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இணக்கம் தெரிவித்திருந்தது.
இதன்படி இன்று முன்வைக்கப்படவுள்ள வரவு-செலவுத்திட்டம் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் போதும், வரவு-செலவுத்திட்ட விவாத காலப்பகுதியில் நடைபெறும் நேரடிய ஒளிபரப்பிற்கு சமாந்தரமாக சைகை மொழிக்குத் தனியான கட்டமொன்று வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|