செவ்வாய்முதல் தனியார் பேருந்துகள் சேவைப் பறக்கணிப்பு – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவிப்பு!
Sunday, July 19th, 2020
எதிர்வரும் செவ்வாய்க்கிழமைமுதல் தனியார் பேருந்து சேவையில் 50 சதவீத பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளதாவது –
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அதிக பயணிகளை பேருந்தகளில் ஏற்ற வேண்டாம் என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க இன்னும் அனுமதி வழங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே பேருந்துக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அனுமதியை கோரும் வகையில் 50 சதவீத பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தாமலிருக்க தீர்மானித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அனுமான வயதுச்சான்றிதழ் பெறுவது எப்படி!
இலங்கை - தாய்லாந்து இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்படும் - இருநாட்டு அரசதலைவர்கள் ...
அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானவை அல்லவென சட்டமா அதிபர் தெரிவிப்பு - பசு வதையை தடைசெய்தல் தொடர்பான...
|
|
|


