செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூரசங்காரம் !
Wednesday, October 25th, 2017
வரலாற்றுச் சிறப்பு மிக்க வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கந்தசஸ்டி விரதத்தின் சூரசங்கார நிகழ்வு இன்று புதன்கிழமை(25) மாலை முதல் சிறப்பாக இடம்பெற்றது.
பிற்பகல்-05 மணிக்கு விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்றத்தைத் தொடர்ந்து ஆறுமுகப் பெருமான் உள்வீதி வலம் வந்தார். மாலை-06 மணியளவில் ஆறுமுகப் பெருமான் அழகிய சிறிய மஞ்சத்தில் வெளிவீதியில் எழுந்தருளினார். இதனையடுத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் சூரன் போர் இடம்பெற்றது.
ஆக்ரோஷமாக ஆடி வந்த சூரபத்மனை ஆறுமுகப் பெருமான் சங்காரம் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இவ்வாலய சூரசங்கார நிகழ்வைக் காண யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் ஆலயச் சூழலில் திரண்டிருந்தனர்.

Related posts:
பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்!
மக்கள் ஆணையை தேர்தல் ஆணைக்குழு வெற்றிபெறச் செய்யவேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
முன்பதிவு செய்து கொண்டவர்களுக்காக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்!
|
|
|


