செல்வசந்நிதி – கதிர்காமம் பாதயாத்திரை ஆரம்பம்!

Thursday, May 17th, 2018

வரலாற்று பிரசித்திபெற்ற கதிர்காமத்திற்கான பாதயாத்திரை இன்று காலை செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது.

இப்பாத யாத்திரை 46ஆவது வருடமாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலக சைவத்திருச்சபையின் இலங்கைக்கான கிழக்குமாகாண இணைப்பாளரும் ஸ்ரீ நந்தவனப்பிள்ளையார், கதிர்காம பாதயாத்திரைக்குழுவின் தலைவருமான வேல்சாமிமகேஸ்வரன் தலைமையில் 54 நாட்கள் கொண்ட இப்பாதயாத்திரையின் போது 98 ஆலயங்கள் தரிசிக்கப்படவுள்ளன.

இந்த நீண்ட பாதயாத்திரை 1972ஆம் ஆண்டு அமெரிக்க துறவி பற்றிக்ஹரிகனால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. பின்னர் 2007ஆம் ஆண்டிலிருந்து காரைதீவைச்சேர்ந்த வேல்சாமிமகேஸ்வரனிடம் அவரது பயணத்தை தொடருமாறு பற்றிக்ஹரிகன் வேண்டிக்கொண்டார். அதற்கிணங்க வேல்சாமி மகேஸ்வரன் தலைமையில் 2007ஆம் ஆண்டு முதல்இப்பாதயாத்திரை நடைபெற்றுவருகின்றது. நாட்டின் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளின் போது இப்பாதயாத்திரை வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்திலிருந்துஆரம்பமாகியது.

அதன் பின்னர் இப்பாதயாத்திரை 2012 இலிருந்து யாழ்ப்பாணம் செல்வச்சந்நதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி 7ஆவது தடவையாக இன்று ஆரம்பமாகியுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Related posts: