செட்டிகுள வைத்தியசாலையின் தேவைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும் – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Tuesday, March 9th, 2021

வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையில் காணப்படும் ஆளணி மற்றும் புனரமைப்பு பணி உள்ளிட்ட பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.

குறித்த வைத்தியசாலை பல்வேறு பிரச்சினைகளுடன் செயற்படுவதாக பலதரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து வைத்தியசாலைலக்கு நேரில் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் வைத்திய அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது குறித்த வைத்தியசாலை பல கிராமங்களில் இருந்தும் நாளாந்தம் வரும் அதிகளவான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு வைத்தியசாலையாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனாலும் பல வருடங்களாக குறீத்த வைத்தியசாலைக்கான எந்தவித அபிவிருத்திகளோ அன்றி ஆளணி வெற்றிடங்களை நிரப்பம் செயற்பாடுகளோ  மேற்கொள்ளப்படவில்லை.

குறிப்பாக தாதியர் பற்றாக்குறை இவ் வைத்தியசாலையின் சேவையை பெரிதும் பாதித்து வருகின்றது.  அதேபோன்று விடுதிகளும் சீர்ப்படுத்தப்படாத நிலையிலேயே காணப்படுகின்றது. அத்துடன் மருத்துவர்கள், தாதியர்கள் தங்கும் விடுதிகளும் மிக மோசமடைந்த நிலையில் உள்ளது. இவற்றை சீர்செய்து தமது சேவையை இலகுவாக முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொண்ட தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனிடம் குறித்த வைத்தியசாலை நிர்வாகத்தினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

வைத்தியசாலையின் அவசிய தேவைகள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் இது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக தான் துறைசார் அமைச்சருடன் பேசி தீர்வுகளை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்திருந்ததுடன் சில விடயங்களை  ஒருங்கிணைப்பு குழுவில் பிரஸ்தாபித்து தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இலங்கையின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைக் கடந்தது – பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதார பக...
இறுக்கமான வரையறைகளுடன் நல்லூர் உற்சவம் – ஆலயத்திற்கு செல்ல தடுப்பூசி அட்டை அவசியம் – யாழ்.மாநகரசபை அ...
சுற்றுலாப்பயணிகள் கொரோனா காப்புறுதியை பெறுவது கட்டாயமானது - சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!