தமிழினத் துரோகி சுமந்திரன் – எமது தொழிலில் கைவைக்க என்ன உரிமை உள்ளது ௲ நூற்றுக்கணக்கான குருநகர் கடற்றொழிலாளர்கள் வீதியில் போராட்டம் ௲ சுமந்திரனின் உருவப் பொம்மையும் எரிப்பு!

Tuesday, October 26th, 2021

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ சுமந்திரனுக்கு எதிராக இன்றையதினம் யாழ். குருநகர் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அவரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டுள்ளது.

இழுவை மடித்தொழிலை தடை செய்ய வேண்டும் எனவும், தடை செய்யப்பட்ட தொழில் முறமைகளுக்கு எதிரான சட்டத்தை  கடற்றொழில் அமைச்சர் கடுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் சுமந்திரன் தலைமையில் கடந்த வாரம் போராட்டம்  ஒன்று முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரையிலான கடற்பரப்பில் நடைபெற்றது.

இதன்போது கடற்றொழிலாளர் அமைப்புகள் பலருக்கு தெரியப்படுத்தாது குறித்த போராட்டத்தின் உண்மை தன்மையை வெளிப்படுத்தாது இந்தியாவுக்கு எதிரான போராட்டம் என கூறி சுமந்திரன் முல்லைத்தீவிலிருந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் இதில் தமது அமைப்புகளின் விருப்பு வெறுப்புகளை கணக்கிஅலடுக்காது சுமந்திரன் தனது அரசியல் சுயநலனுக்காக அதை முன்னெடுத்திருந்ததுடன் ஆரம்பிக்கப்பட்ட நோக்டகத்தை கைவிட்டு போராட்டத்தின் இறுதியில் கடற்றொழில் அமைச்சருக்கு எதிராக அதை நகர்த்தி சென்றது மட்டுமல்லாது இந்திய கடற்றொழிலாளர்களது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுடன் றோலர் இழுவை மீன்பிடி முறைமையை தடைசெய்வதுடன் குறிப்பாக குருநகர் பகுதி கடற்றொழிலாளர்களின்  ரோலர் இழுவைமடி மீன்பிடியையும் தடைசெய்யுமாறு வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் சுமந்திரனின் கோரிக்கையால், குறிப்பாக குருநகர் கடற்றொழிலாளர்களினதும்  குறித்த தொழில் நடைமுறைகளை தடைசெய்யுமாறு வலியுறுத்தியிருந்ததாகவும் உள்ளூரில் இழுவை மடி தொழில் செய்யும் மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தே குருநகர்  மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் உள்ளூர் மீனவர்கள்  எவரும் அடிமடி தொழில் செய்வதில்லை எனவும், இந்திய மீனவர்களே அடிமடி தொழில் செய்கின்றனர்.எனவும் சுட்டிக்காட்டியிருந்த கடற்றொழிலாளர்கள் கடந்த காலங்களில் தமது ரொலர் மீன்பிடி நடவடிக்கைகள் தடைப்பட்டுப்போன சந்தர்ப்பங்களிலெல்லாம்   தம்மீது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொண்டுள்ள அக்கறை காரணமாகவே அதை தாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடிந்ததாகவும் தமது தொழில் நடவடிக்கைகளில் பாதிப்பு இல்லாததன் காரணமாகவே அ ததை தாம் செய்யமுடிவதாகவும் தெரிவித்த மக்கள் தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை செய்துவரும் நிலையிலேயே சுமந்திரன் அவற்றை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் இவர் தமிழ் மக்களின் துரோகி எனவும் தெரிவித்த மக்கள் இந்திய மீன்பிடியாளர்களால் எமது  கடல் வளங்கள் அழிக்கப்படுவதுடன், உள்ளூர் மீனவர்களின் வலைகளை அறுத்து நாசம் செய்யப்படுகின்றது என்றும் இந்நிலையில் பொதுவாக இழுவை மடி தொழிலுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தினால், உள்ளூர் மீனவர்களே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை குருநகர் பகுதியில் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.

அத்துடன் குறித்த போராட்டத்தை முன்னெழுத்த  நூற்றுக்கணக்கான கடற்றொழிலாளர்கள் சுமந்திரனின் செயற்பாடகளால் தாம் அதிர்ப்பியுற்றுள்ளதுடன் நாடாளுமன்றில் தம் சார்ந்த எந்த விடயத்தையும் சுமந்திரன் தனிநபர் பிரேரணையாக கொண்டு செல்ல வேண்டிய தேவை இல்ல என்றும் வலியுறுத்தியிதுடன் கம்பமொன்றில் கட்டப்பட்டிருந்த சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து பொல்லுகளால் அடித்ததுடன் தீமூட்டி எரித்து தமது ஆதங்கங்களை தீர்த்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: