புதிய அரசியலமைப்பு ஐக்கியமான நாட்டை கட்டியெழுப்ப உதவும் – அமைச்சர் மங்கள சமரவீர!

Thursday, October 27th, 2016

உத்தேச புதிய அரசியலமைப்பு பிளவுபடாத ஐக்கிய நாடொன்றை உருவாக்கும் வகையில் வகுக்கப்படுமென்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சமகால அரசாங்கம் நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம், பேகர் உள்ளிட்ட அனைத்து இனங்களினதும் உரிமைகளை பாதுகாப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் செயற்திறனான ஊடக கலாசாரம் காணப்படுகின்றது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் துரிதப் படுத்தப்படுமென்றும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஜெருசலம் நகரம் தொடர்பில் யுனெஸ்கோ அமைப்பு அண்மையில் கொண்டு வந்த பிரேரணைக்கு இலங்கை வாக்களிப்பதை தவிர்த்து கொண்டமை கொள்கை அளவிலான விடயமாகுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பலஸ்தீனின் உரிமைகள் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அரசியல் ரீதியில் வங்குரோத்து நிலைக்கு உள்ளாகியுள்ள சிலர் உள்நாட்டு முஸ்லிம் மக்களை அரசாங்கத்திற்கு எதிராக தூண்ட முயற்சிக்கின்றனர். கடந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு அடிப்படைவாத அமைப்புக்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் போது இவர்கள் மௌனம் சாதித்ததை அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சி.எஸ்.என்.அலைவரிசையின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டமை எந்த விதத்திலும் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக அமையாது என குறிப்பிட்டார்.

d19203bfda1421ef0c267977c1b72927_L

Related posts: