2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் ஆரம்பம்!

Monday, November 23rd, 2020

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்றுமுதல் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த வரவு செலவுத் திட்டத்திற்கான இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 மேலதிக வாக்குகளினால் கடந்த 21ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று (23) ஆரம்பமாகியுள்ள குழுநிலை விவாதம் எதிர்வரும் மாதம்  10ஆம் திகதி வரை நடைப்பெறவுள்ளது.

அன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு மூன்றாம் வாசிப்பு தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஜனாதிபதியின் உத்தரவுவை அடுத்து பாடசாலை மாணவர்களுக்கு பிரத்தியேக பேருந்துகள் ஏற்பாடு - இலங்கை போக்குவ...
புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் - உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்...
நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருக்கும் நிலையில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்ட...