சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவைக்கு நாளாந்தம் 5,300 க்கும் மேற்பட்ட அழைப்பு – இராஜாங்க அமைச்சு!
Wednesday, May 5th, 2021
1990 என்ற சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவைக்கு நாளாந்தம் 5 ஆயிரத்துக்கு 300 க்கும் மேற்பட்ட அழைப்புகள் கிடைக்கப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார சேவை, தொற்று நோய் மற்றும் கொவிட் நோய் தடுப்பு கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் பணிகளில் சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவை ஈடுபட்டுள்ளது.
நாடு முழுவதும் 297 சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவைகள் இடம்பெறுகின்றன.அதற்காக 1394 பணிக்குழாமினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும் புதிதாக 112 நோயாளர் காவு வண்டிகளுக்கான தேவைப்பாடுகள் நிலவுவதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
அத்தியவசியப் பொருட்களின் உத்தேச விலைகள் இன்று வெளிவரும்!
தரம் ஐந்து பரீட்சை: வினாத்தாளில் குறைப்பாடுகள்!
புதிய கல்விக் கொள்கை தயாரிப்பின்போது இலங்கைச் சட்டத்தையும் ஒரு பாடமாக உள்வாங்க நடவடிக்கை - கல்வி அமை...
|
|
|


