குப்பைகளை அகற்றும் அதிகாரமும் மாகாண சபைக்கு – அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க
Tuesday, June 27th, 2017
கழிவு பொருட்களை முகாமைப்படுத்துதல் குறித்து தமது அமைச்சுக்கு எந்தவொரு பொறுப்பும் இல்லையென மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.பிரதேச சபைகளும் நகர மற்றும் மாநகர சபைகளும் தற்போது இயங்குவதில்லை.
எனவே குப்பைகளை அகற்றுவது தொடர்பான மொத்த அதிகாரமும் மாகாண சபையின் கீழ் சென்றுள்ளது. இந்த நிலையில் குப்பைகளை அகற்றுவது தொடர்பான சிக்கல்களுக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோரே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாட்டாளி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சந்தேகத்திற்கிடமாக ஒன்றுகூடிய 41 இளைஞர்கள் மருதனார்மடத்தில் இராணுவத்தினாரால் கைது!
அமைச்சர் பிரசன்னவுக்கு சிகிச்சை வழங்க மறுப்பு - இலங்கை மருத்துவ சபை ஆராய்வு!
இலங்கைக்கு உண்மையான நண்பனாக சீனா இருந்தது - பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவிப்பு!
|
|
|


