சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் – துறைசார் தரப்பினரிடம் நிதி அமைச்சர் பசில் கோரிக்கை!

Saturday, July 31st, 2021

உலகம் எதிர்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை  கட்டியெழுப்புவதற்கு தேவையான வசதிகளை  ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் தயார் நிலையில் உள்ளதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலுடன் தொடர்புடைய ஹோட்டல் உரிமையாளர்கள், விமான சேவை நிறுவனத்தினருடன் நிதி அமைச்சில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையில் போது மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில் –

சுற்றுலாத்துறை சேவையினை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் சுகாதார தரப்பினரது ஆலோசனைகளை பெற்றுள்ளது.

அதேநேரம் சுற்றுலாத்துறை சேவையை கட்டியெழுப்ப பிற நாடுகள் நிவாரண பொதி முறைமையை சுற்றுலாத்துறை சேவையில் அறிமுகப்படுத்தியுள்ளதுடன் இதுபோன்ற செயற்திட்டங்கள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அத்துடன் தற்போதைய  நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டுள்ளது.

அந்தவகையில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மீள் கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைளுக்கும் சுற்றுலா சேவை துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: