மே தினம் – ரமழான் பண்டிகை காலங்களில் மின் துண்டிப்பு ஏற்படுத்தப்படாது – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, April 30th, 2022

மே 1 மற்றும் மே 3 ஆகிய திகதிகளில் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மே 1 ஆம் திகதி உலக தொழிலாளர் தினத்தையும், மே 3ஆம் திகதி முஸ்லிம்கள் ரமழானையும் முக்கிய விடுமுறை தினமாக கொண்டாடு வதற்காக தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை

நாட்டில் A முதல் W வரையான வலயங்களில் இன்றையதினம் 3 மணிநேரமும் 20 நிமிடங்களும் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன் மாலை 5 மணிமுதல் இரவு 9மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது.

கொழும்பு நகர்ப்பகுதிகளில் காலை 6 மணிமுதல் 9 மணி வரையான 3 மணிநேரங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது

இதேவேளை, நாளையும், எதிர்வரும் மூன்றாம் திகதியும், நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மே தினம் மற்றும் ரமழான் பண்டிகை காரணமாக குறித்த தினங்களில் மின்சாரத்தை துண்டிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எதிர்வரும் இரண்டாம் மற்றும் நான்காம் திகதிகளில், A முதல் W வரையான வலயங்களில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வலயங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் ஒரு மணிநேரமும் 20 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாகும்.

இதேவேளை கொழும்பு நகர் பகுதிகளில் குறித்த தினங்களில் காலை 6 மணிமுதல் 9 மணிவரையான மூன்று மணித்தியாலங்களுக்கு மின்துண்டிப்பு அமுலாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: