சுற்றுலாதுறையை ஊக்குவிக்க தேசிய திட்டம் அடங்கிய சட்டமூலம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Monday, January 27th, 2020

மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபைகள் இணைந்து சுற்றுலாதுறையை ஊக்குவிக்க தேசிய திட்டம் அடங்கிய சட்டமூலம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த தேசிய திட்டத்தை உருவாக்குவது தொடர்பில் ஆராயும் விசேட சம்மேளன கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (24) ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது.

அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் சுற்றுலா அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருன்திக்க பெர்ணான்டோ, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, தென் மகாண ஆளுநர் வீலி கமகே, வட மேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ விதாரண, ஊவா மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே உள்ளிட்ட மாகாண பிரதம செயலாளர்களும் கலந்துக்கொண்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் நாட்டை கட்டியெழுப்பும் சிறந்த இலக்கு என்ற எண்ணகருவிற்கு அமைய 2030 ஆண்டாகும் போது 6 மில்லியன் சுற்றுலா பயணிகளை உள்ளீர்ப்பது நோக்கமாகும்.

அதன் ஊடாக 2030 ஆம் ஆண்டாகும் போது 10 பில்லியன் வருமானத்தை பெற உத்தேசிக்கப்பட்டள்ளது. இந்த இலக்கை அடைவதற்காக சுற்றுலாதுறையை ஊக்குவிக்கும் தேசிய திட்டம் அடங்கிய சட்டமூலம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இணையத்தின் மூலம் விடுதிகளை முன்பதிவு செய்தல், போக்குவரத்து வசதிகளை முன்பதிவு செய்தல், உள்ளக விமான பயண சீட்டுகளை பெற்றுக் கொள்ளக் கூடிய வகையிலான தொழிநுட்பம் அடங்கிய சுற்றாலா துறையை உருவாக்கல் போன்ற சேவைகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts: