நிதி அமைச்சர் உள்ளிட்ட 13 பேருக்கு நோட்டீஸ்!

Tuesday, September 27th, 2016

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர், சுங்கத்திணைக்களபொதுப் பணிப்பாளர் மற்றும் ஏனைய 11 பேரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது.

இலங்கையில் இந்த வருட ஆரம்பத்தில் இடம் பெற்ற வெள்ள அனர்த்தத்தின் போது தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்ட வரிச்சலுகை தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. “சிங்கலே” தேசிய முன்னணி உட்பட 8 கட்சிகள் இந்த மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது.

இதனால் அரசாங்கத்திற்கு 6 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனுவானது மேன்முறையீட்டு நீதிபதிகளான விஜித் மலால்கொட மற்றும் பிரீத்திபத்மன் சுரசேன முன்னிலையில் பரிசீளிக்கப்பட்ட பின்னர் குறித்த 14 பேரையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டிஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

TAMILMISSION.COM-12

Related posts: