சுயதொழில் கடன் திட்டம் மே மாதத்தில் நடைமுறை – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா !

Monday, April 2nd, 2018

சுயதொழிலின் மூலம் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கான சிறப்பான கடன் திட்டம் எதிர்வரும் மே மாதம் நடைமுறைக்கு வரவுள்ளது என்று தெரிவித்தார் முன்னாள் அ ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்தார். வடக்கு மாகாணத்தில் தொழில் முயற்சிக்காகக் கடன்களைப் பெற்றவர்களை அவர் மாவட்ட செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். அதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு மாகாணத்திலே தொழில் முயற்சிகளை மேற்கொள்ளுபவர்களுக்கு அரசு பல்வேறு கடன் திட்டங்களை வழங்குகின்றது. கடன்களைப் பெற்றவர்கள் சிறு தொழிலை ஆரம்பித்து அதன் ஊடாக வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டும். சரியான சந்தைப்படுத்தல் அமையுமாயின் அதன் ஊடாக ஏனையவர்களுக்கும் தொழில் வாய்ப்பை வழங்க முடியும். மேலும் கடன்களை பெற முடியும்.

எதிர்வரும் மே மாதம் தொழில் முயற்சியாளர்களுக்கான குழு மற்றும் தனி கடன்கள் அரச வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் ஊடாக வழங்கப்படவுள்ளன. 5 தொடக்கம் 6 வீத குறைந்த வட்டியுடன் இந்தக் கடன் வழங்கப்படவுள்ளது. இந்தக் கடன்களை பெறுபவர்கள் சிறப்பான செயல் திட்டங்களை முன்வைப்பது அவசியம். இரண்டு வகையான கடன்கள் வழங்கப்படும். நிதி அமைச்சின் ஊடாகவும் நடப்பு ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் கூட்டுறவு சங்கங்களின் ஊடாகவும் வழங்கப்படவுள்ளன என்றார்.

Related posts:


தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப நாட்டின் சட்டங்களை மாற்ற முடியாது - பாதுகாப்புச் செயலாளர் கமல...
பொனறுவையில் அரிசி ஆலை உரிமையாளர்களின் வசமிருந்த பெருந்தொகை அரிசி அரசுடமையானது – சதொச ஊடாக விநியோகிக்...
21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும்போது பட்டதாரி பயிலுனர்கள் பணிக்கு சமுகமளிக்க வேண்டும் - பொது நிர்...