அமுலுக்கு வரும் அரச சேவையாளர்களின் பணி நேர மாற்றம் !

Monday, November 7th, 2016

அரச பணியாளர்கள் மத்தியில் நெகிழ்வுத்தன்மையான வேலை நேரக்கொள்கை அமுல்செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முதற்கட்டமாக கொழும்பில் இந்த நெகிழ்வு தன்மையான வேலை நேர கொள்கை, அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்கவை மேற்கோள் காட்டியே குறித்த செய்திவெளியாகியுள்ளது.

இதன்படி அடுத்த மாதம் முதல், இந்த திட்டம் பரீட்சாத்த ரீதியில் அமுல்செய்யப்படவுள்ளது. ஜனவரி மாதம் முதல் பத்தரமுல்ல பகுதியில் நிரந்தரமாக அமுல்செய்யப்படவுள்ளது.

கொழும்பின் பாரிய வாகன நெருக்கடியை குறைக்கும் நோக்கிலேயே இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு அமைய அரசசேவையில் உள்ளவர்கள், காலை 7 மணியில் இருந்து 10 மணிவரைக்குள் கடமைகளுக்கு அழைக்கப்பட்டு பிற்பகல் 3 மணிமுதல் 6 மணிவரையில் பணிகளை நிறைவு செய்ய முடியும்.

தற்போது அரச சேவையாளர்களின் பணிநேரம் காலை 8.30 முதல் மாலை 4.30 என்ற அளவில் வரையறுக்கப்பட்டுள்ளது எனினும் பணியாளர்கள் முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 3மணிவரை பொதுமக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவகையில் கருமங்களில் ஈடுப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளார்கள்

இந்தமுறையை கடைப்பிடிக்கும் வகையில் தனியார்துறையினருடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

13-Admin

Related posts: