சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தமிழ் கைதி மரணம்தொடர்பில் ஆதாரம் வெளியானது!

Saturday, September 17th, 2016

2012 ஆம் ஆண்டு இடம் பெற்ற தமிழ் கைதி ஒருவரின் மரணம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார, சார்ஜண்ட் ஒருவர் மற்றும் இரண்டு காவலர்களை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமா அதிபர் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த தமிழ் கைதி தப்பிச் சென்ற போது கிணற்றில் பாய்ந்து உயிரிழந்தார் என குறித்த அதிகாரிகள் அப்போது தெரிவித்திருந்தனர். ஆனால், உயிரிழந்த தமிழ் கைதியின் உடலில் தாக்குதல் அறிகுறிகள் மற்றும் காயங்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது.

இறந்த கைதியின் உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விசாரணைகள் தொடர்பான அறிக்கையினை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் கையளித்துள்ளனர். குறித்த தமிழ் கைதி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் சட்டமா அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.

பின்னர் குறித்த ஆதாரங்களை ஆய்வு செய்த சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி உட்பட ஏனையவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 court-gavel-200-seithy

Related posts: