சுத்தமான நகரம் எனும் தொனிப்பொருளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் ஊர்காவற்றுறையில் சிரமதானம்!

Wednesday, April 18th, 2018

சுத்தமான நகரம் என்ற தொனிப்பொருளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக  ஊர்காவற்றுறை பிரதேச சபையின் கீழான குளங்களை சிரமதானம் செய்யும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இச் சிரமதானப் பணியில் பிரதேச செயலர் திருமதி மஞ்சுளாதேவி சதீசன், ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன், பிரதேச சபை செயலாளர் தர்சினி உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் நேரடி வழிகாட்டலில் சுத்தமான நகரம் எனும் தொனிப்பொருளில் எமது ஆளுகைக்கு உட்ப்பட்ட பிரதேச சபைகளில் சிரமதான பணிகளை முன்னெடுக்கவுள்ளோம்.

அதன் அடிப்படையிலேயே ஊர்காவற்றுறை பிரதேசத்தில் சிரமதான பணிகளை இன்றைய தினம் ஆரம்பித்துள்ளோம் என்றும் எமது இந்த பணிகள் எதிர்காலத்திலும் தொடரப்பட உள்ளதாகவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளரும் மாநகர சபை உறுப்பினருமான கா வேலும் மயிலும் குகேந்திரன்  தெரிவித்துள்ளார

வறட்சியான காலங்களில் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் எமது பிரதேச மக்கள் மிகுந்த நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அதனடிப்படையிலேயே இப் பிரதேசத்தில் உள்ள குளங்களை நாம் சிரமாதானப் பணி மூலம் புனரமைப்பு செய்து வருகின்றோம் என ஊர்காவற்துறை பிரதேச செயலர் திருமதி மஞ்சுளாதேவி சதீசன் தெரிவித்துள்ளார்.

Related posts:

தூர நோக்குடைய அரசியல் தலைமையை ஏற்படுத்துவதனூடாகத்தான் தமிழ் மக்கள் தமது உரிமைகளையும் வாழ்வியலையும்  ...
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை பொற்றுக்கொள்ள இலங்கை கடும் முயற்சி - இங்கிலாந்து சாதகமான பதிலளித்துள்ளதாக...
ஊழியர் நிதியத்தில் வரி அறவிடும் யோசனை பல சந்தர்ப்பங்களில் நிராகரிக்கப்பட்டது – அமைச்சர் நிமல் சிறிபா...