சுதந்திரக் கிண்ண 2 ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி!
Friday, March 9th, 2018
சுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடரின் இந்தியா ௲ பங்களாதேஷ் மோதிய இரண்டாவது போட்டியில் இந்தியா அணி 6 விக்கட்களினால் வெற்றி பெற்றுள்ளது.
நாயண சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்துள்ளது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக ஷிகார் தவான் 55 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.
Related posts:
சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் ஐ சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – இரு நாடுகளுக்கிடையே...
நாட்டில் கடந்த ஆண்டு ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானோர் வேலையை இழந்துள்ளனர் - பேராதனை பல்கலைக்கழகத்தின...
ஆண், பெண் சமூக சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலங்கள் மே மாதம் நாடாளுமன்றத்தில் சம...
|
|
|


