சுகாதார விதிமுறைகளை மீறிய ஆயிரத்து 240 முச்சக்கர வண்டிகள் கண்டறியப்பட்டது!
Thursday, April 29th, 2021
முச்சக்கர வண்டிகள் தொடர்பாக நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது,தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1,240 முச்சக்கரவண்டிகள் கண்டறியப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த தேடுதலில் நடவடிக்கையின்போது 6 ஆயிரம் 110 முச்சக்கர வண்டிகள் பரிசோதிக்கப்பட்டன. பல முச்சக்கரவண்டி சாரதிகள் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதை அவதானிக்க முடிந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்
Related posts:
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 1000 கோடி மோசடி – வசந்த!
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - மட்டக்களப்பில் தெரிவுசெய்யப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணை வழங...
புதிய பொருளாதார மாற்றத்திற்காக கடந்த 14 மாதங்களில் 42 புதிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் -...
|
|
|


