சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற தவறிய 11 பேருந்து சாரதிகள் கைது – பொலிசார் தகவல்!

பொது போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கும்போது சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிக்கத் தவறும் பேருந்து உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை கைது செய்வதற்காக நாடளாவிய ரீதியில் இன்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் பயணிகள் போக்குவரத்தின் போது சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற தவறிய 11 பேருந்து ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பொதுப் போக்குவரத்தை முன்னெடுப்பது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து நடத்துபவர்கள் வழிகாட்டல்களைப் புறக்கணிப்பது தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|