வடக்கு கிழக்கில் மேலும் 10000 பேருக்கு வீடுகள் அமைக்கப்படும் – மீள்குடியேற்ற அமைச்சின் சௌலாளர் சிவஞானசோதி!
Friday, October 14th, 2016
வடக்கு கிழக்கு பகுதிக்க மேலும் 10000 வீடுகள அமைப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் மாவட்ட செயலகங்களினூடாக இதற்கான பயனாளிகள் தெரிவு செய்யப்பட இருப்பதாக அமைச்சின் சௌலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட 10000 வீடுகள் அக்டோபர் நவம்பர் மாதமளவில் பூர்த்திசெய்யப்படும் என்று நம்பிக்கை வெளியிட்ட அவர் இதேபோன்று மேலும் 10000 வீடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் வழங்க ஏற்பாடுசெய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழுகின்ற குடும்பங்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் வயோதிபர்கள் போன்றவர்களை உள்ளடக்கி இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இரு மாத காலத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – அமைச்சர் ச...
மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணை அடுத்த வாரம் அமைச்சரவையில் - மின்சக்தி அமைச்சர் அறிவிப...
மழையுடன் கூடிய காலநிலை - செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் நிறுத்தம்!
|
|
|
கிளிநொச்சியிலும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள் - பிராந்திய தொற்று நோயியல் நிபுணர் நிமல் அருமைநாதன...
மக்கள் ஆட்சியை உறுதிப்படுத்தும் சந்தர்ப்பம் பறிக்கப்படாதிருப்பதற்காவே பாதீட்டை வெற்றியடைய செய்திருந்...
முறையான குழந்தைப் பராமரிப்பு ஒழுங்குவிதிகள் இல்லாமை நாட்டின் பெண் தொழிலாளர் பங்கேற்புக்கு பெரும் இடை...


