சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரம் உள்ளிட்ட கொடுப்பனவுகள் 15 சதவீதம் குறைப்பு – சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையும் வெளியீடு!

Friday, February 17th, 2023

சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை 15 சதவீதம் குறைத்து சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனால் மாதாந்த சம்பளத்தினை நம்பியிருக்கும் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த தீர்மானத்தை உடனடியாக மீளப் பெற வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த தீர்மானத்தினால் சுகாதார சேவை பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: