சுகாதார அமைச்சுக்குள் பிரவேசித்து கலகம் விளைவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது – அமைச்சர் ராஜித்த சேனாரட்ன

பல்கலைக்கழக மாணவர் குழுவொன்று சுகாதார அமைச்சின் கட்டடத்திற்குள் பிரவேசித்து கலகம் விளைவித்த விதத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதென சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் செயற்பாடுகளால் சுகாதார அமைச்சின் கட்டடங்கள் சேதமடைந்தன. இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நாடு டெங்கு ஆட்கொல்லியை சமாளிப்பதற்காக தத்தளிக்கும் வேளையில், வேலை நிறுத்தங்களில் ஈடுபடுவது நியாயமானதா என்றும் சுகாதார அமைச்சர் அரச மருத்துவ உத்தியோகத்தர் சங்கத்தை நோக்கி கேள்வி எழுப்பினார்.
Related posts:
எதிர்வரும் 20 ஆம் திகதி வங்கிகளுக்கு அரை நாள் விடுமுறை!
முறையான பயிற்சிகளை நிறைவு செய்யாத ஆசிரியர்களால் முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது - ...
வடக்கு - கிழக்கில் இடம்பெற்றுவந்த காணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மத்தியஸ்த சபை முறைமை ஊடாக நடவடிக்க...
|
|