சுகாதாரத்துறை தொடர்பான ஒன்பது சட்டமூலங்கள் எதிர்காலத்தில் முன்வைக்கப்படும் – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!.
Thursday, August 8th, 2024
இலங்கையில், சுகாதாரத்துறை தொடர்பான ஒன்பது சட்டமூலங்கள் எதிர்காலத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மருத்துவ திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போதே சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனைத் தெரிவித்தார்.
மேலும் அரசாங்க வைத்தியசாலைகளில் 52 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார்
இதேவேளை அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் வைத்தியசாலைகளில் உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் தேசிய நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
70 இலட்சம் பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது!
டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை வீழ்ச்சி!
வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியான சே...
|
|
|


