சீரற்ற காலநிலை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் – காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!

Wednesday, November 9th, 2022

நாட்டின் நிலவுகின்ற சீரற்ற காலநிலை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிழக்கு ஊவா சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் ஆங்காங்கே 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாவாவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கிளிநொச்சி மாவட்டத்திற்கு மற்றொரு வரப்பிரசாதத்தை பெற்றுத்தந்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – மாவ...
நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமரின் தலைமையில் வெளியிடப்பட்டது!
தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு - நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொது மக்கள...