கிளிநொச்சி மாவட்டத்திற்கு மற்றொரு வரப்பிரசாதத்தை பெற்றுத்தந்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – மாவட்ட அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன்!

Sunday, February 14th, 2021

வறுமையின் பிடியில் முதலாவது இடத்தில் இருக்கும் எமது கிளிநொச்சி மாவட்டத்தின் மறுமலச்சிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள இரணைதீவு கடலட்டை ஏற்றுமதி கிராமம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இரணைதீவில் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தினை அங்குரார்ப்பண நிகழ்ச்சியில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஈதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர் –

யுத்தத்தால் அழிந்து கிடந்த எமது கிளிநொச்சி மாவட்டத்தின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அயராது பாடுபட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மற்றொரு முயற்சியாக இந்த இரணைதீவு கடலட்டை ஏற்றுமதிக் கிராமம் அமைந்துள்ளது.

அதுமட்டுமல்லாது கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தியையும் மக்களின் அபிவிருத்தியையும் குறிக்கோளாக கொண்டு துரித கதியில் இந்த திட்டத்தை உருவாக்கி தந்துள்ளமையானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆளுமையையும் மக்கள் மீது அவர் கொண்டுள்ள பற்றையும் காட்டிநிற்கின்றது.

அந்தவகையில் இன்று இப்பிரதேச மக்களுக்கு கிடைக்கப்பெற்ற இந்த அழப்பெரிய வரப்பிரசாதத்தை நீங்கள் ஒவ்வொருவரும் சரியாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக மாறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts: