சீரற்ற காலநிலை – மீண்டும் டெங்கு நோய் தாக்கம் அதிகரிப்பு!

தற்போதைய மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் 5 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்காக விசேட டெங்கு ஒழிப்பு திட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில், 48 ஆயிரத்து 791 இடங்கள் காண்காணிக்கப்பட்டுள்ளன.
இதன்போது டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய 11 ஆயிரத்து 148 இடங்களும், நுளம்பு குடமிகளுடன் கூடிய 1444 இடங்களும் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு, பொது மக்களிடம் கோரியுள்ளது.
Related posts:
உடன் அமுலாகும் வகையில் நாடுமுழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்!
கைத்தொழில் வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்ல இலங்கை புதிய தொழில் உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் – மத்...
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளன - பொது பாதுகாப்ப...
|
|